வியட்நாம் அகதிகள் விவகாரம் தொடர்பில் ஆஸ்திரேலியா, மெல்பேர்ண் மேற்கு பகுதியில் முதலாவது அருங்காட்சியகம் அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
குறித்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்குரிய முயற்சி 2005 ஆம் ஆண்டு ஆரம்பமாகி இருந்தாலும் தற்போதே அது கை கூடியுள்ளது.
வியட்நாம் போரின்போது லட்சக்கணக்கானவர்கள் அந்நாட்டில் இருந்து வெளியேறினர். அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்கம் ப்ரேசர் இதற்குரிய நடவடிக்கையை எடுத்திருந்தார்.
வியட்நாமில் இருந்து அகதிகள் வெளியேறி இவ்வருடத்துடன் 50 வருடங்கள் ஆகின்றன.
ஆஸ்திரேலியாவில் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம்வரையிலான வியட்நாமியர்கள் வாழ்கின்றனர்.
குறித்த அருங்காட்சியகத்துக்காக கூடுதலாக 2 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு விக்டோரியா அரசாங்கம் முன்வந்துள்ளது.