2025 கூட்டாட்சி தேர்தலின்போது மெல்பேர்ணில் உள்ள Higgins தொகுதி நீக்கப்படும் என்பதை தேர்தல் ஆணைக்குழு நேற்று உறுதிப்படுத்தியது.
தேர்தல் மறுசீரமைப்பு நடவடிக்கையின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Higgins தொகுதியானது தமிழ் பின்னணிகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மிச்செல் ஆனந்தராஜா வசம் உள்ளது. 2022 கூட்டாட்சி தேர்தலில் அவர் வெற்றிபெற்றார்.
Higgins தொகுதி நீக்கப்பட்டுள்ளதால் அவர் அரசியலில் இருந்து விலக வேண்டும். இல்லையேல் புதிய தொகுதியொன்றில் களமிறங்க வேண்டும்.
1949 ஆம் ஆண்டிலேயே Higgins தொகுதி உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள்கூட இந்த தொகுதியை பிரதிநிதித்துப்படுத்தியுள்ளனர்.
Higgins தொகுதி நீக்கப்பட்டுள்ளதால் விக்டோரியாவில் 39 இல் இருந்து 38 ஆக பெடரல் நாடாளுமன்ற எண்ணிக்கை குறைக்கப்படும்.