நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் காணாமல்போன 6 வயது சிறுமியை தேடும் நடவடிக்கையின்போது, புதர் நிலத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை. எனினும், அது காணாமல்போன சிறுமியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
தெற்கு நியூ சவூத் வேல்ஸில் உள்ள வடக்கு நர்வா பகுதியில் வைத்தே குறித்த சிறுமி நேற்று காணாமல்போயிருந்தார்.
இதனையடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். மாலை 6 மணியளவில் சிறுமி காணாமல்போன பகுதியில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டது.