நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த வருடம் மாத்திரம் 85 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த 10 வருடங்களில் மாநிலத்தில் கடந்த வருடமே அதிகளவு கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 2014 ஆம் ஆண்டில் 93 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
அதேபோல 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை 46 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 58 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
2024 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டவர்களில் 46 பேர் ஆண்கள் எனவும், 26 பேர் பெண்கள் எனவும் 13 பேர் இளைஞயவர்கள் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் இடம்பெற்ற கொலைகளில் 45.9 சதவீதமானவை குடும்ப வன்முறையால் இடம்பெற்ற கொலைகளாகும்.