குயின்ஸ்லாந்து ப்ரேசர் கடற்கரை பகுதியில் நபரொருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
50 வயது நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் சடலத்துக்கு அருகில் இருந்து துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
உடலின் கீழ் பகுதியில் காயங்கள் இருந்துள்ளன, வாகன விபத்தால் ஏற்படும் காயத்துடன் அவை ஒத்துபோகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகத்தின்பேரில் 20 மற்றும் 30 வயதுடைய நான்கு இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.