இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், கடுமையான குற்றம் இழைத்தால் அவர்களின் குடியுரிமையை இரத்து செய்து, நாடு கடத்துவதற்கு துறைசார் அமைச்சருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டுமா என்பதை தீர்மானிப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனால் இந்த யோனை முன்மொழியப்பட்டுள்ளது.
பூர்வக்குடி மக்களுக்குரிய குரல் கட்டமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது இது பணத்தை வீணடிக்கும் செயல் என விமர்சித்த எதிர்க்கட்சி தலைவரே, தற்போது இப்படியொரு யோசனையை முன்வைத்துள்ளார்.
எனினும், மேற்படி யோசனை சிந்தனை சிதறல் நடவடிக்கையென்கூறி அதனை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அதேபோல எதிர்க்கட்சி தலைவரின் யோசனை தொடர்பில் கூட்டணிக்குள்ளும் குழப்பநிலை உள்ளது.