நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் இளைஞர்களுக்கு மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.
இதற்காக 60 பேரடங்கிய விசேட பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடும் குழுவினரை, இந்த படைப்பிரிவு முதற்கட்டமாக குறிவைத்து செயல்பட உள்ளது.
" குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதான நகரங்களை மையப்படுத்தி தேடுதல் வேட்டை இடம்பெறும். ஹெலிகொப்டரும் பயன்படுத்தப்படவுள்ளது.
சமூகவலைத்தளங்கள் ஊடாக குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களும் குறிவைக்கப்படவுள்ளனர்.