கூட்டாட்சி தேர்தலில் லிபரல் கூட்டணி வெற்றிபெற்றால் தான் முதலாவதாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து பேச்சு நடத்தி, பொதுவான இணக்கத்துக்கு வர முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் ஆற்றிய உரையின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் மற்றும் சீனாவுடனான உறவுகளை லேபர் அரசாங்கம் கையாளும் விதத்தையும், உக்ரைனுக்கு அமைதி காக்கும் படையினரை அனுப்புவதில் பிரதமரின் நிலைப்பாட்டையும் எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் அல்பானீஸியைவிட ட்ரம்ப் நிர்வாகத்தை தன்னால் சிறப்பாக கையாள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.