இஸ்லாமிய அரசு தொடர்பான வன்முறை காணொளியை ஒன்லைனில் பகிர்ந்த மேற்கு ஆஸ்திரேலிய இளைஞனுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக பயன்பாட்டை உள்ளடக்கிய புதிய காமன்வெல்த் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்கீழ் தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் இவராவார்.
19 வயதான குறித்த இளைஞன் கடந்த ஜுன் மாதம கைது செய்யப்பட்டிருந்தார்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் கூட்டு பயங்கரவாத எதிர்ப்புக் குழு நடத்திய விசாரணையில், இஸ்லாமிய அரசு தயாரித்த தலை துண்டிக்கும் வீடியோக்கள் மற்றும் அவர்களின் இனம் மற்றும் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் மக்களுக்கு எதிராக வன்முறையை ஊக்குவிக்கும் காணொளி பதிவுகள் உள்ளடக்கிய உள்ளடக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையிலேயே அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2026 மே மாதமே அவரால் பிணைக்கு விண்ணப்பிக்க முடியும்.