சிட்னி தென்மேற்கு பகுதியில் நேற்றிரவு பொலிஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
கறுப்பு மஸ்டா ரக வாகனமொன்றை நேற்றிரவு பொலிஸ் வாகனம் பின்தொடர்ந்துள்ளது.
இந்நிலையிலேயே பின்தொடரலுடன் தொடர்புபடாத வெள்ளை நிற செடான்மீது பொலிஸ் வாகனம் மோதியுள்ளது.
35 வயது வாகன சாரதியும், இரு பொலிஸ் அதிகாரிகளும் விபத்தில் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.