வடக்கு குயின்ஸ்லாந்தில் போவன் அருகே உள்ள புரூஸ் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர்.
திங்கட்கிழமை காலை 6 மணியளவில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.
நான்கு தீயணைப்பு வீரர்கள் உட்பட குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்ததாக அவசர சேவைகள் பிரிவு தெரிவித்தன.
சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்துவிட்டதாகவும், மேலும் இருவர் போவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குயின்ஸ்லாந்தில் இவ்வருடத்தில் இதுவரையில் விபத்துகளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
சபா.தயாபரன்