ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சி நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் மே 03 அல்லது 10 ஆம் திகதியில் நடத்தப்படக்கூடும் என தெரியவருகின்றது.
ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சி நாடாளுமன்ற தேர்தலை ஏப்ரல் 12 ஆம் திகதி நடத்துவதற்கு பிரதமர் அந்தோனி அல்பானீஸி தலைமையிலான லேபர் அரசு திட்டமிட்டிருந்தது.
இது தொடர்பான அறிவித்தலை மார்ச் 9 ஆம் திகதி பிரதமர் விடுக்கவிருந்தார். எனினும், ஆல்பிரல் வெப்பமண்டல சூறாவளி காரணமாக தேர்தல் அறிவிப்பை பிரதமர் கைவிட்டார்.
இதனால் ஏப்ரல் 12 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் மார்ச் 31 ஆம் திகதி தேர்தல் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்படும் பட்சத்தில் மேற்படி இரு நாட்களில் ஒரு தினத்தில் தேர்தல் நடத்தப்படும்.
அவ்வாறு அல்லாமல் ஏப்ரல் 7 ஆம் திகதி தேர்தலுக்குரிய அறிவிப்பு வெளியானால் மே 17 ஆம் திகதி ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறக்கூடும்.