அமரர் அப்பையா இரவீந்திரன்
பிறப்பு – 29.12.1945
இறப்பு – 24.06.2026
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசித்து வந்த தமிழ் சமூகத் தலைவரும், '4EB தமிழ் வானொலியின்' முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான திரு. ஆலவாய் ரவி அவர்கள் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த சோகத்துடன் அறியத்தருகின்றோம்.
திரு. ஆலவாய் ரவி அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளுக்காகவும், சமூக வானொலி ஊடாக அவர் வழங்கிய பெறுமதிமிக்க பங்களிப்புகளுக்காகவும் எப்போதும் நினைவு கூரப்படுவார்.
அன்னாரது மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அன்பானவர்கள் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.