மரண அறிவித்தல்
ஏரம்புநாதன் முருகதாஸ்
(ரஞ்சன்)
மறைவு: 15.10.2026
காரைநகர் பாலகாட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட ஏரம்புநாதன் முருகதாஸ் (ரஞ்சன்) 15.10.2026 அன்று கொழும்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற ஏரம்புநாதன் மற்றும் சரஸ்வதிதேவி அவர்களின் அன்புப் புதல்வரும், நயினாதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற தனஞ்ஜெயராசா (தனந்தி) மற்றும் ஜெயந்தி அவர்களின் மூத்த மருமகனுமாவார்.
அன்னார் தவப்பிரியா அவர்களின் பாசமிகு கணவரும், பிரணாளினி, அனன்யா, அபிரா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார். கார்த்திகாயினி, கலைவாணி, கலையரசி, காலஞ்சென்ற அரவிந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், தவச்செல்வி, சுயந்தன், காலஞ்சென்ற கிருஷ்ணராஜா, லோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், புவிந்தன், பவித்திரா, தனிசன் ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.
அஞ்சலி மற்றும் இறுதிக்கிரியைகள்
அன்னாரின் பூதவுடல் 17/18ம் திகதிகளில் காலை 10 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 19.10.2026 திங்கட்கிழமை காலை 8 மணிக்கு மகிந்த மலர்ச்சாலையில் ஆரம்பமாகி, கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
தவப்பிரியா (மனைவி): +94 77 270 9757
கலைவாணி (சகோதரி): +61 424 372 401