சவூதி அரேபரியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள் சிவராஜா அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளை மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
அனோஜனின் பெற்றோர் இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.
இச்சந்தப்பில் அனோஜனின் தந்தையரான தம்பிராசா சிவராஜா, தாயாரான இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரர் சிவராஜா ஹம்சிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கு மத்தியில், இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அனோஜன் அவர்களின் விடுதலை தொடர்பான விவரங்களை சஜித் பிரேமதாச கேட்டறிந்தார்.
மேலும் சவூதி சிறையில் இருக்கும் அனோஜனுடன் தொலைபேசி வழியாக பேசி அவரிடம் விடயங்களை கேட்டறிந்த பின்னர் , வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் சஜித் கேட்டறிந்தார்.
சாதி, மத பேதமின்றி அனோஜனின் விடுதலைக்காக செய்யக்கூடிய உட்சபட்ச அனைத்து முயற்சிகளையும் செய்வேன் எனவும் அனோஜனின் பெற்றோரிடம் சஜித் உறுதியளித்தார்.