அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த சிமெந்து கலவை இயந்திர வாகனம், வீதியில் பயணித்த பல வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நால்வர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள ஏனைய விவரங்களைக் கண்டறியப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.