பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்வரும் 06ஆம் திகதி பாரிய போராட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 3 மணிக்கு, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கப் பிரமுகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடக்குமுறைச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.