2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது அதற்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி வாக்களித்துள்ளது.
அத்துடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய தமிழ்த் தேசியக் கட்சிகளும் எதிராகவே வாக்களித்தன.
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி இம்முறை அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கவில்லை. எதிரணியில் இருந்தபோதும் கடந்தமுறை மறைமுக ஆதரவை வெளிப்படுத்தி இருந்தது.
2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று மாலை 6.50 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் 97 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.