விக்டோரியா மேற்கு பகுதியில் 15 வயது சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் மெல்பேர்ண் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.
இதன்அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இன்னும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை.