“ வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.” – என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ச.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் அதேபோல நாட்டை பாதுகாக்கக்கூடிய கொள்கைத் திட்டம் முன்வைக்கப்படும். எமக்கு கிராமிய மட்டத்திலான மக்களுடன்தான் கொடுக்கல் - வாங்கல் உள்ளது. அந்தவகையில் மொட்டு கட்சி தற்போது பலமடைந்துவருகின்றது.
தேர்தல் காலங்களில் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஏனைய கட்சிகளைப்போல நாம் கொள்கைகளை மாற்றப்போவதில்லை.
வடக்கில் உள்ள இளம் தலைமுறையினர் என்னை நம்புகின்றனர். அவர்களிடம் நான் உண்மை நிலைமையை கூறிவருகின்றேன். எம்மால் செய்யக்கூடிய விடயங்களை நிச்சயம் செய்வோம். குறிப்பாக பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமுடியாது. வடக்கு, கிழக்கு இணைப்புக்கும் இடமில்லை. இந்நாட்டை பிரிக்க முடியாது.
எனவே, வடக்கு மக்களிடம் யதார்த்தத்தைகூறி அரசியல் நடத்துகின்றோம். தேர்தலுக்காக பொய்யுரைக்கவில்லை.” – என்றார்.