ஆஸ்திரேலியா உட்பட 35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் தமது நாட்டுக்கு வருவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு இந்த வாய்ப்பு மேற்படி நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன், ஜேர்மனி, நெதர்லாந்து ,பெல்ஜியம் ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட 35 நாடுகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.