பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சார்ந்த சட்டங்கள் இல்லாதொழிக்கப்பட்டு அனைத்த மக்களினதும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது.
வடக்கு, கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல்போகச் செய்வித்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் எனவும் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை, அதிகாரப்பகிர்வு, அத்துமீறிய குடியேற்றங்களுக்கு தடை மற்றும் மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட உறுதிமொழிகளும் இன்று வெளியிடப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.