இந்நாட்டு வளங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் சட்டத்தின் முன் நிச்சயம் நிறுத்தப்படுவார்கள் - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஐக்கிய மக்கள் சக்தியானது கள்வர்களுடன் டீல் வைக்கவில்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்காக மக்கள் உரிமையைக் காட்டிக்கொடுக்கவில்லை. புண்ணியத்தால் ஜனாதபதி பதவிக்கு வருவதற்குரிய தேவைப்பாடு எனக்கு கிடையாது. மக்கள் ஆசியுடன்தான் நான் ஆட்சிக்கு வருவேன்.
எமது ஆட்சியில் கொள்ளையர்கள் மற்றும் மோசடியாளர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள். அவர்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் சொத்துகள் பறிக்கப்பட்டு, அவை நாட்டுக்காக முதலிடப்படும்.” – என்றார்.