வடக்கு,கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்,மலையக தமிழ் எம்.பிக்களும் இணைந்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன்.
இவ்வாறு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து செயற்பட்டால் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி பிறக்கும் எனவும் அவர் கூறினார்.
“ வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் பிரிவடைந்துள்ளன. மலையகத்திலும் இந்நிலைமை காணப்படுகின்றது. இது ஏற்புடைய விடயமல்ல. எனவே, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைந்துக்கொண்டு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பனர்களாக நாம் இணைந்து பயணிக்க வேண்டும். அதன்மூலம் அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்.” – எனவும் ராதாகிருஷ்ணன் எம்.பி. குறிப்பிட்டார்.