அறகலயவில் ஈடுபட்ட தரப்பினரால் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் போராட்ட முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே களமிறங்கவுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை மக்கள் போராட்ட முன்னணியின் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மக்கள் போராட்ட முன்னணி உறுப்பினர்கள் கூறியவை வருமாறு,
“ நாட்டை நாசமாக்கிய ராஜபக்சக்களை நாட்டு மக்கள் விரட்டியடித்தனர், ஆனால் அவர்களின் காவலனாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாறியுள்ளார். பிரதான எதிர்க்கட்சியும் அவர்கள் வழியில்தான் பயணிக்கின்றது. எனவே, இவையெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
எனவேதான் சாதாரண மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக எமது அணி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றது.” – என்றார்.
சட்டத்தரணி நுவான் போபகே, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் சட்டத்தரணியாவார். தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்காகவு