யாழ். மாவட்டத்தில் மூன்று பிரதான தமிழ்த் தேசியக் கட்சி களின் வாக்குகள் ஏறத்தாழ இரு மடங்கினால் அதிகரிக்க, ஆளும் தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகள் வீழ்ச்சிகண்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 17 சபைகளிலும் உள்ள 409 உறுப்பினர்களில் 135 இடங்களை தமிழ் அரசுக் கட்சி வென்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களில் இது 33 சதவீதமாகும்.
இதேநேரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில் 81 உறுப்பினர்களை பெற்றுள்ளதோடு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி 79 உறுப்பினர்களை பெற்று 3 வது இடத்தை எட்டியுள்ளது.
இதேபோன்று வாக்கு எண்ணிக் கையில் 2024 ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி 27,986 வாக்குகளை எடுத்த தமிழ்க் காங்கிரஸ் 26,605 வாக்குகள் அதிகரித்து 54,591 வாக்குகளை இம்முறை பெற்றுள்ளது.
நாடாளு மன்றத் தேர்தலில் 22,513 வாக்கு களை மட்டுமே பெற்ற ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி 22,058 வாக்குகள் அதிகரித்து 44,571 வாக்குளை பெற்றுள்ளது.
இவ்வாறே 63,327 வாக்குகளை பெற்ற தமிழ் அரசுக் கட்சி 117,616 வாக்குகளைப் பெற்று சாதனை வெற்றியை நிலை நாட்டி அதிகப்படி யாக பெருவாரியான வாக்குகளைப் பெற்றுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் 80,830 வாக்குகளைப் பெற்ற அநுரா அரசின் தேசிய மக்கள் சக்தியானது, இம்முறை 13,663 வாக்குகள் பின்னடைவச் சந் தித்து 67,167 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டது.