ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்ற பிறகு அமையவுள்ள அரசாங்கத்தில் பிரதமர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவுக்கு வழங்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
பெண்களுக்கான சம உரிமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டே பெண் பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு தேசிய மக்கள் சக்தியில் உள்ள அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என அறியமுடிகின்றது.
அதேவேளை சஜித் பிரேமதாச வெற்றிபெறும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார அல்லது ஜீ.எல்.பீரிஸ் ஆகிய இருவரில் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படக்கூடும் என தெரியவருகின்றது.