ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றால் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு டிசம்பர் மாதமளவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்குரிய இயலுமை உள்ளது என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்றால் கூடியவிரைவிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சஜித் பிரேமதாச வெற்றிபெற்றாலும் குறுகிய காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றால், வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டு நிறைவேற்ற பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.