யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற் றைய அகழ்வின் போது சிறுவர்களின் என்புத் தொகுதிஎனச் சந்தேகிக்கப்படும் மூன்றுஎன்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்தமனிதப் புதைகுழியில் இதுவரை 42 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயா னத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஒன்பதாம் நாள் அகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின் போது சிறுவர் களின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப் படும் மூன்று என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை 37 என்புத் தொகுதிகள் முழுமை யாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 42 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை 10ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன.