" தமிழீழக் ஈழக் கனவு இன்னும் கைவிடப்படவில்லை. போர் மூலம் அடைய முடியாத இலக்கை சமாதானம்மூலம் அடைவதற்குரிய முயற்சி தொடர்கின்றது."
இவ்வாறு முன்னாள் கடற்படை பேச்சாளரும், தமிழர் மாணவர்கள் கடத்தல் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவருமான டி.கே.பி. தசநாயக்க தெரிவித்தார்.
ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தினரை பாதுகாக்கும் அமைப்பில் இவரும் அங்கம் வகிக்கின்றார். அவ்வமைப்பினர் மகாநாயக்க தேரரை சந்தித்தவேளையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
'30 வருடகால போரில் இருந்து இராணுவத்தினரே உயிர் தியாகங்களுக்கு மத்தியில் நாட்டை மீட்டெடுத்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட நாட்டை பாதுகாத்துக்கொள்வதற்கு அரசியல் தலைமைத்துவம் முன்வரவேண்டும். அப்படி நடப்பதாக தெரியவில்லை.
போரின்போது புலிகளுக்கு பெற முடியாமல்போனதை சமாதானம்மூலம் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச அமைப்பு ஊடாக முயற்சி எடுக்கப்படுகின்றது. அதாவது ஈழம் கனவு கைவிடப்படவில்லை. அதனால்தான் இலங்கையிர் அநீதி இழைக்கப்படுவதாக விம்பம் உருவாக்கப்படுகின்றது." எனவும் அவர் கூறினார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் என்பன ஸ்தாபிக்கப்பட்டுவிட்டால் அது படையினரின் தியாகத்தை காட்டிக்கொடுப்பதாகவே அமையும்." - என முன்னாள் படை அதிகாரியான டி.கே.பி. தசநாயக்க குறிப்பிட்டார்.