உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல்கள் அறிந்த அசாத் மௌலானாவை நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான மீள் விசாரணைகள் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன. இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த சாட்சியாளரான அசாம் மௌலானா அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் வழங்கி தகவல்களின் அடிப்படையில் பல குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன.
அசாத் மௌலானாவை நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை சட்டப்பூர்வமாகவும், இராஜதந்திர மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது." - என்றார்.