அடுத்த வருடம் முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" 2025 ஆம் ஆண்டில் நாம் தேர்தல் நடத்தினோம். எனவே, 2026 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும். சட்டரீதியாக உள்ள தடைகள் நீக்கப்படும்.
மாகாணசபைத் தேர்தலை நடத்திய பின்னர், புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய நடவடிக்கை ஆரம்பமாகும். புதிய அரசியலமைப்பை இயற்றும் பணியென்பது பரந்தப்பட்ட விடயமாகும்."- என்றார்.