இனவாத அரசியல் பாதையை சுமந்திரன் மாற்றாவிட்டால் வடக்கு, கிழக்கில் அவரது அரசியல் எதிர்காலம் இல்லாமல்போகக்கூடும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
' சுமந்திரன் அடிப்படைவாதி அல்லர், அவர் நடுநிலைவாதியென்றே நாம் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் நடுநிலை என்ற போர்வையின் பின்னால் மறைந்திருந்த இனவாதம் என்ற மிருகம் தற்போது வெளிக்கிளம்பியுள்ளது.
இனவாதம் இல்லாவிட்டால் அவர்களுக்கு அரசியல் இருப்பு இல்லை. எனினும், இனவாதத்துக்கு ஒருபோதும் இருப்பு இருக்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
சுமந்திரன் தெரிவுசெய்த பாதை தவறு. எனவே, அவர் தனது பயணத்தை மாற்றிக்கொண்டு இனவாதமற்ற - நாட்டின் சமத்துவத்துக்காக முன்னிலையானால் நல்லது. அவ்வாறு இல்லையேல் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும். கடந்த முறை நாடாளுமன்றம்கூட வரவில்லை. அவருக்கு வடக்கு, கிழக்கில் அரசியல் வாய்ப்பு கிட்டால் போகும்." - என பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.