யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலை 6.15 மணியளவில் வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று ஆறுமுகப் பெருமான் வள்ளி - தெய்வானை சமேதராய் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேர்த் திருவிழாவில் புலம்பெயர்நாடுகள் மற்றும் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆறுமுகப் பெருமானின் அருள் காட்சியைக் கண்டுகளித்தனர்.
தேர்த் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்கப் பிரதஷ்டை, அடியழித்தல், கற்பூரச் சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் எனத் தமது நேர்த்திக்கடன்களை நிறைவு செய்தனர்.