" செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணைமூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" செம்மணி விவகாரம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இனவாதத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ந்து கருத்துகளை முன்வைத்து வருகின்றன.
இந்நிலைமை நீடித்தால் தென்னிலங்கையில் இனவாதிகளின் அரசியலுக்கு சாவு மணி அடித்ததுபோல வடக்கு, கிழக்கிலுள்ள அரசியல் வாதிகளுக்கும் எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் என்பதை அவர்களை நினைவில் கொள்ள வேண்டும்." - எனவும் கிட்ணன் செல்வராஜ் எம்.பி. குறிப்பிட்டார்.