முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக ரணில் விக்கிரமசிங்க இன்று சிஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சான்ட்ரா பெரேரா ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் சிஐடியில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார்.
நான்கு மணிநேர விசாரணைகளின் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.