" இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் கடந்தகால அரசுகள்விட்ட தவறை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விட்டுவிடக்கூடாது. தமது தீர்வு திட்டம் பற்றி தெளிவுபடுத்த வேண்டும்."
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
" நாங்களும், நீங்களும் இந்நாட்டின் இணை பங்காளிகளாக இணைந்து செயற்படுவதைற்கு உங்களிடம் இருக்கும் பாதை - திட்டம் என்ன ? ஓராண்டு கடந்தும் அதற்குரிய முயற்சி எடுக்கப்படவில்லை. அதனால்தான் பிரேரணைமூலம் நினைவூட்டல் செய்யப்படுகின்றது.
இதுவொரு வரலாற்றின் கட்டம். எனவே, ஜே.ஆர். ஜயவர்தன, பிரேமதாச, விஜேதுங்க, சந்திரிக்கா, மஹிந்த, கோட்டாபய ஆகியோர் விட்ட தவறை, தேசிய மக்கள் சக்தி விடாது என நம்புகின்றோம்.
வரலாறு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
எனவே, புதிய வரலாற்றை உருவாக்க முன்வரவேண்டும். வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் அரசியல் தீர்வு, அதிகாரப்பகிர்வு என்பன பற்றிய உங்களிடம் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும்." - என்றார்.