இலங்கையல் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட ஆறு பாதாள குழு உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த தகவலை இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளார்.
கெஹேல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த, பானதுர நிலாங்க உள்ளிட்ட பாதாள குழு உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார்.
இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிரதான குற்றவாளியான கெஹேல்பத்தர பத்மே, மலேசியாவிலிருந்து தப்பிச் சென்று இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்குரிய சட்டரீதியிலான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்த ஆறு பேர் மீதும் கொலை, போதைப்பொருள் கடத்தல், கொள்ளை உள்ளிட்ட பல தீவிர குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களை இவர்கள் வெளிநாடுகளில் பதுங்கி இருந்து வழிநடத்தியுள்ளனர் என தகவல்கள் கடந்த காலங்களில் வெளியாகின.