கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் விவசாயப் பண்ணைக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் அண்மித்த பகுதியல் டிப்பர் வாகனம், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றின் பின்னால் ஒன்று மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து இன்று அதிகாலை 5.15 மணிக்கு கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதி, அதே திசையில் சட்டவிரோத கசிப்பினை கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து எற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.