யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கோட்டை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கோட்டையில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்பதற்கு அர்ச்சுனா எம்.பி. வருகை தந்திருந்தார்.
இதன்போது கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்திருந்தார். தவறான வார்த்தை பிரயோகத்தையும் மேற்கொண்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நீதமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.