" பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் அதைவிடவும் பாரதூரமான சட்டமொன்றை கொண்டுவருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது." - என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
" பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை மறந்துவிட்டே அரசாங்கம் செயற்படுகின்றது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களிலேயே பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் பற்றி அதிகளவில் கதைக்கப்பட்டது. இது ஏன்? ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை திசை திருப்பும் நோக்கிலேயே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது." எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினாலும்கூட அதனைவிட பாரதூரமான சட்டமொன்றை கொண்டுவருவதற்கே ஆளுங்கட்சி முற்படுகின்றது. மன்னாரில் மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது குட்டி நேபாளமாக மன்னார் மாறியுள்ளது. இவ்வாறான மக்கள் எழுச்சிகளை ஒடுக்குவதாக இருந்தால் ஆளுங்கட்சிக்கு அடக்குமுறையென்பது அவசியம். அதனால்தான் பயங்கரவாத தடைச்சட்டத்தைவிடவும் பாரதூரமான சட்டத்தை கொண்டுவர முற்படுகின்றனர்." எனவும் சிறிதுங்க ஜயசூரிய குறிப்பிட்டார்.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆளுங்கட்சி மௌனம் காக்கின்றது. எல்லை நிர்ணய விவகாரத்தைக் காண்பித்து இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது. கிரிக்கெட் மைதானத்தை அமைத்து வடக்கு மக்களை ஏமாற்ற முடியாது. " - என ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய குறிப்பிட்டார்.