ஆவியாக வந்து பழிதீர்ப்பேன்: அநுர அரசை மிரட்டிய எம்.பி.!
" எனக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. சிலவேளை என்னை கொலை செய்தால், ஆவியாக வந்து நிச்சயம் பழிதீர்ப்பேன் என்பதை புரிந்துகொள்ளுங்கள் பொலிஸ்துறை அமைச்சரே... "
இவ்வாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலமீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபை தவிசாளர், பாதாள குழு தலைவருடன் தொடர்புபட்டவர் என அமைச்சர் வெளியிட்ட தகவல் தொடர்பிலும் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
இது தொடர்பில் சாமர எம்.பி. கூறியவை வருமாறு,
" பொலிஸ் அமைச்சரே, நாம் எதற்கும் அஞ்சவில்லை. அச்சுறுத்தல் மூலம் எம்மை அடிபணிய வைக்க முடியாது. முடிந்தால் எம்மை கொல்லுங்கள்.....அவ்வாறு கொலை செய்தால்கூட ஆவியாக வந்தேனும் பழிதீர்ப்பேன்.
எனது பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது. என்னை கொல்வதற்குதான் பார்க்கின்றீர்கள். கொலை செய்தாலும் உங்களுக்கு பின்னால்தான் வந்து நிற்பேன் என்பதை மறந்துவிட வேண்டாம்." என்றார் சாமர எம்.பி.