யாழ். தேர்தல் மாவட்டத்தில் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு 30, 571 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு 20,348 வாக்குகளும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு 7 ஆயிரத்து 182 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 2,805 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றுள்ளார்.
அவருக்கு 28, 301 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு 18,810 வாக்குகளும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு 7, 117 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 3,453 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.