ஜனாதிபதி தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றுள்ளார்.
அவருக்கு ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 177 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 688 பேர் வாக்களித்துள்ளனர்.
சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 84 ஆயிரத்து 558 வாக்குகளும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 27 ஆயிரத்து 86 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.