2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மூன்று தமிழர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அருணலு மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு வைத்தியர் கே.ஆர். கிரிஷான் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
அதேபோல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா சுயாதீன வேட்பாளராக களமிறங்குவதற்கு கட்டுப்பணம் முன்வைத்துள்ளார்.
களமிறங்கும் பா. அரியநேத்திரனும் சுயாதீன வேட்பாளராக களமிறங்குவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
கட்டுப்பணம் செலுத்துவதற்குரிய கால எல்லை ஆகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவுபெறுகின்றது.
வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெறும்.