ஆளுநர் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் பதவிகளிலும் மாற்றம் வரவுள்ளது என தெரியவருகின்றது.
தென்மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் , வடமேல் மாகாண ஆளுநர் நஷீர் அஹமட், வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ், மத்திய மாகாண ஆளுநர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். ஏனைய ஆளுநர்களும் பதவி விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்பின்னர் புதிய ஆளுநர்கள் நியமனம் இடம்பெறும்.
அதேவேளை, அரசியல் நியமனத்துடன் வெளிநாட்டு தூதரக சேவைகளில் முக்கிய பதவிகளில் உள்ளவர்களும் மாற்றப்படவுள்ளனர். இதற்குரிய நடவடிக்கை கட்டங்கட்டமாக எடுக்கப்படவுள்ளது.
அரச திணைக்களங்களில் தகுதியற்ற நிலையில், அரசியல் நியமனத்தால் உயர் பதவிகளில் இருப்பவர்களின் பதவிகளும் மாற்றப்படவுள்ளது என தெரியவருகின்றது.