இலங்கை நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இதற்கமைய நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன நேற்று இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இடைக்கால அமைச்சரவையை இன்று நியமிக்கவுள்ளார்.இடைக்கால அரசின் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்படவுள்ளார்.
பொதுத்தேர்தலை நடத்துவதற்கு இலங்கை நாணய பெறுமதியில் 11 பில்லியன் ரூபா செலவாகும் என தேர்தல் ஆணைக்குழு மதிப்பிட்டுள்ளது.