“போர் முடிவடைந்த பின்னர் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவிருந்த வாய்ப்பு நழுவவிடப்பட்டது. அந்த தவறை மீண்டும் இழைத்துவிடக்கூடாது.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இந்த வலியுறுத்தலை விடுத்திருந்தார்.
“பேரிடரால் சர்வதேச சமூகத்தின் பார்வை இலங்கை பக்கம் திரும்பியுள்ளது. இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முற்பட வேண்டும்.
சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. எனினும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதாக தெரியவில்லை.
எனவே, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை விரைவில் நடத்த ஏற்பாடுகள் இடம்பெறவேண்டும்.” எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி, பேரிடர் நிலைமையை காண்பித்து 20 சதவீத வரியை மேலும் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்; எனவும் சஜித் மேலும் கூறினார்.
அதேவேளை, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்குரிய நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.