முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மூன்று நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்குரிய தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழேயே பிரகாரமே இதற்குரிய அனுமதி பெறப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் வழங்கப்பட்ட பில்டல் ரக துப்பாக்கியொன்று வெலிவேரிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு மீடக்கப்பட்டது.
பாதாள குழு உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமையவே இது மீடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித படுகொலை விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.
இதற்கமைய டக்ளஸ் தேவானந்தா நேற்று கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பில் அவரிடம் பலகோணங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையிலேயே, 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிப்பதற்குரிய தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.