தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எட்டுப்பேர் அடங்கிய தேசிய காவல்துறை ஆணைக்குழுவில், இரண்டு உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த வெற்றிடங்களில் ஒன்றுக்கு, முன்னாள், யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும், முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளருமான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியை நியமிப்பதற்கு, சிஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியலமைப்புப் பேரவை பரிந்துரை செய்திருந்தார்.
இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் அரசியலமைப்புப் பேரவையில் ஆராயப்பட்ட போது, சிவில் சமூகப்பிரதிநிதிகள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவையின் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ஏனைய உறுப்பினர்களிடம் கருத்துக் கோரிய போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அபூபக்கர் ஆதம்பாவா, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, அவரது பிரதிநிதி அஜித் பி.பெரேரா, சிறுகட்சிகளின் பிரதிநிதி சி.சிறிதரன் ஆகியோர் அதற்கு எதிர்ப்பு வெளியிடாததை அடுத்து, அந்தநியமனம் வாக்கெடுப்பின்றி உறுதி செய்யப்பட்டதாக கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.